Latestமலேசியா

முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும்!- ஜக்தீப் சிங்

ஜோர்ஜ் டவூன், டிச.21- பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பைப் போன்று, கூட்டரசு அரசாங்கம் முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ கூறினார்.

நிதியைப் பெற்றுக் கொள்ள தகுதியான வழிபாட்டுத் தலங்களை தேர்வு செய்து பினாங்கு மாநிலத்தின் ஊராட்சி, வீடமைப்பு, நகர் மற்றும் புறநகர்த் திட்டமிடல் குழுத் தலைவருமான ஜக்தீப் தெரிவித்தார்.

“பினாங்குதான் இந்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கிய முதல் மாநிலமாகும். இதே போன்று கூட்டரசு அரசாங்கமும் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

“இவ்வாறான நிதியை அமைப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை கூட்டரசு அரசாங்கத்துடன் பகிர்ந்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார் அவர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதற்கொண்டு, முஸ்லீம் அல்லாத 131 வழிபாட்டுத் தலங்களுக்கு ரிம.4.9 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த வழிபாட்டுத் தலங்களை மறுசீரமைக்க அந்த நிதி வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker