Latestமலேசியா

வாய்ப்பை வேதமூர்த்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை! -காதீர் ஜாசின்

கோலாலம்பூர், டிச.21- தேசிய ஒருமைப்பாட்டு, சமூகநல அமைச்சராக தனக்கு வழங்கப்பட்ட பதவியை பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி சரிவர செய்யவில்லை என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டத்தோ காதீர் ஜாசின் கூறினார்.

புதிய அரசாங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேதமூர்த்தி, தம்மீது விதைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“வேதமூர்த்திக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், யாருக்கும் பாரமாக இல்லாமல், அவர் பதவி விலகிக்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

“வேதமூர்த்தியின் சேவை தனக்கு திருப்தி அளிப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள போதிலும், யாருக்கும் தொடர்ந்து பாரமாக இல்லாமல், வேதா பதவி விலக வேண்டும்” என்று காதீர் ஜாசின் சொன்னார்.

கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதியன்று, சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தகராறில், போலீசார் தங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவில்லை என்பதால், ஆலய பாதுகாவலர்களும் வன்முறையை பயன்படுத்த வேண்டும் என்று வேதமூர்த்தி தூண்டியதாக கூறப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker