Latestமலேசியா

‘வேதமூர்த்தியை பலிகடா ஆக்காதீர்!’ -ஜசெக இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், டிசம். 21- சுபாங் ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலய கலவரம் மற்றும் தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் தாக்கப்பட்டு உயிர் நீத்த சம்பவம் ஆகியவற்றுக்கு பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி மீது பழி போடுவது அவதூறானது என்றும் அடிப்படையற்றது என்றும் ஜசெக இளைஞர் பிரிவு தெரிவித்தது.

சில தரப்புகள் வேண்டுமென்றே வேதமூர்த்தி மீது பழிபோட்டு அவரை பலிகடாவாக்க முயற்சிக்கின்றன என்று ஜசெக இளைஞர் பிரிவு செயலாளர் தே ஹுங் கியாட் குறிப்பிட்டார்.

முகம்மட் அடிப்பின் மரணத்திற்கு காரணமான நபர்களை கைது செய்து, இப்பிரச்னைக்கு நியாயமான, வெளிப்படையான தீர்வு ஒன்றை அரசாங்கம் காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதை விடுத்து வேதமூர்த்தியை பலிகடாவாக்கக் கூடாது என்றார் அவர்.

அரசியல் இலாபங்களுக்காக இன உணர்ச்சிகளை கிளப்பி விடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே ஹூங் கியாட் வலியுறுத்தினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker