Latestஉலகம்

66 வயது புடினுக்கு இன்னொரு கல்யாணம்! பொண்ணு யாரு?

மாஸ்கோ, டிசம். 21- விரைவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் இன்னொரு கல்யாணம் செய்யவிருக்கிறார். எனினும் அவர் யாரை மணக்கப் போகிறார் என்பதை வெளியிட மறுத்து விட்டார்.

கடந்த 1983ஆம் ஆண்டில் லயுட்மிலா புடினா என்பவரை திருமணம் செய்த புடின், 2013ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். 66 வயதுடைய புடினுக்கு 30 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அவரது திருமணம் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது திருமணத்திற்கான தருணம் வந்திருப்பதாக புன்னகைத்தவாறு கூறினார். ஆனால் யார் அந்தப் பெண் என்று அவர் கூற மறுத்து விட்டார்.

எனினும், புடினுக்கும் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணையான அலினா கபயேவாவுக்கும் இடையே இகசிய உறவுகள் இருப்பதாகவும் அலினாவின் குடும்பத்திற்கு புடின் தரப்பில் இருந்து கணிசமான சொத்துகள் சென்று சேர்ந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவலாக அடிபடுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker