Latestமலேசியா

கீழே கிடந்த பணப் பையை மலேசிய சுற்றுப் பயணியிடம் ஒப்படைத்த குடிநுழைவுப் பணியாளர்!

பெத்தோங்,டிச.22- நேற்றிரவு பெத்தோங் குடிநுழைவு முகப்பிடத்தின் முன் ரொக்கப் பணத்துடனும், சில கிரேடிட் கார்ட்டுகளுடனும் பணப் பை ஒன்று கிடந்திருக்கிறது. அந்தப் பணப் பையை குடிநுழைவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார். அவர் நினைத்திருந்தால் அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை!

அந்த அதிகாரி உடனடியாக தங்களின் குடிநுழைவு முகப்பிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்த்தார்.

அதன் மூலம் அந்தப் பணப் பை லோ ஹான் பேன் என்ற மலேசிய சுற்றுப்பயணிக்குச் சொந்தமானது என்பதை அவர் கண்டுபிடித்தார்.

பிறகு பெத்தோங்கிலுள்ள முக்கிய தங்குவிடுதிகளில் எல்லாம் லோ ஹான் பேன் என்ற ஆடவர் தங்கி இருக்கிறாரா என்று அந்த குடிநுழைவுப் பணியாளர் அழைத்துக் கேட்டார். இப்படியாக அவர் லோ ஹான் பேன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். உடனடியாக அவரை தொடர்பு கொண்டு தன்னிடம் இருக்கும் பணப் பையை பெற்றுக் கொள்ளுமாறு அந்தப் பணியாளர் கேட்டுக் கொண்டார்.

லோ ஹான் பேன் இன்று காலை பெத்தோங் குடிநுழைவு முகப்பிடத்திற்கு வந்து அந்தப் பணியாளரிடம் இருந்து தனது பணப் பையைப் பெற்றுக் கொண்டார். லோ தனது பணப் பையில் வைத்திருந்த 1,842 ரிங்கிட் அப்படியே இருந்ததைப் பார்த்து அந்த நேர்மையான மனிதருக்கு லோ நன்றியும் தெரித்துக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker