Latestஇந்தியா

குடும்பத்தில் 395 பேருடன் 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்!

அறந்தாங்கி, டிசம். 22- புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி மரணம் அடைந்தார்.

தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மக்கள் தொகை அமைப்பு 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்கள் வாழ்நாள் சராசரி 68 வயது என்றும் பெண்கள் வயது சராசரி ஆயுள் காலம் 71 ஆண்டுகள் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி 119 ஆண்டுகள் வரை வாழ்ந்து நேற்று இறந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள். 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் அருணாச்சலம். 20 வருடங்களுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

இவர்களுக்கு தங்கையா, தவபிரகாசம் என்று 2 மகன்களும்- பத்மாவதி, காந்திமதி, அம்பிகாவதி, கலைமதி, கோமதி என 5 மகள்களும் பிறந்தனர். இவர்கள் மூலம் 22 பேரன்-பேத்திகள், 45 கொள்ளுப் பேரன்- பேத்திகள் என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் மட்டும் உள்ளனர்.

4 ஆவது தலைமுறையுடன் வாழ்ந்த நல்லம்மாள் இறந்த தகவல் அறிந்ததும் உறவுக்காரர்கள் அனைவரும் திரண்டு விட்டனர். 119 வயதை தாண்டி வாழ்ந்த நல்லம்மாள் கடைசி வரை பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார்.

பேரன் பேத்திகள் -கொள்ளுப் பேரன் பேத்திகள் யார் வந்தாலும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து பேசுவார். அண்மையில் நல்லம்மா உடல்நிலை பாதிப்புற்ற நிலையில், உலக சாதனை படைக்க இருந்த அவரை விட்டான் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

———–

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker