உலகம்

ரஜினி அமெரிக்காவுக்கு பயணம்: அடுத்த படத்திற்கு தயாராகிறார்!

சென்னை, டிசம். 22- நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான ‘பேட்ட’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்ட நிலையில் குடும்பத்துடன் மூன்று வார பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

ஒரு பக்கம் படவேலைகள், மறுபக்கம் அரசியல் செயல்பாடுகள் என பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு காலா, 2.0 ஆகி இரண்டு திரைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி அதன் பின் ‘பேட்ட’ படப்பிடிப்பில் தீவிரமாக கலந்து கொண்டார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. இசை வெளியீட்டு விழாவும் முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பேட்ட திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக அவர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் செல்கின்றனர்.

ஜனவரி 10 ஆம் தேதி வரை அமெரிக்காவில் தங்கி புத்தாண்டு விடுமுறையை அங்கு கொண்டாட உள்ளதாக தெரிகிறது. அதன் பின் சென்னை திரும்பியதும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார் என தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker