Latestமலேசியா

அடிப் மறைவு: சித்தி ஹஸ்மாவின் வயலின் இசை சமர்ப்பனம்!

கோலாலம்பூர், டிசம். 23- இங்குள்ள இஸ்தானா புடாயாவில் மறைந்த தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப்புக்காக தமது வயலின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் நெகிழச் செய்யும் வகையில் சித்தி ஹஸ்மா வயலின் நிகழ்ச்சியைப் படைத்தார்.

மறைந்த முகம்மட் அடிப்பின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நாம் பிரார்த்திப்போம் என்று நிகழ்ச்சியின் தொடக்க உரையில் சித்தி ஹஸ்மா குறிப்பிட்டார்.

சுமார் 20 நிமிட நேரம் சித்தி ஹஸ்மா வயலின் வாசித்து முடித்த போது அங்கு திரண்டிருந்தவர்கள் எழுந்து நின்று அவருக்காக கரவொலி எழுப்பிப் பாராட்டினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker