Latestசினிமா

இத்தனை படங்கள் தோல்வியா..! – கதறும் ஷாருக்கான் ரசிகர்கள்

மும்பை, டிச. 23- இந்தி உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு நேரமே சரியில்லை. தொடர்ச்சியான தோல்விப் படங்களைத் தந்து தனது ரசிகர்களை மிகுந்த வேதனைக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கி உள்ளார்.

பாலிவுட் திரையுலகின் “கிங்- கான்” என்று அழைக்கப்படுபவர் ஹஷாருக்கான். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் உலகமே அறியும். பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்.

ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் வெற்றிப் படங்களைக் கொடுக்கப் போராடி வருகின்றார். அதிலும் ஓரிரு படங்கள்படம் என்றால் பரவாயில்லை.

ஷாருக்கான் தொடர்ந்து 6 படங்கள் தோல்விப் படங்களை கொடுத்துள்ளார். நேற்று வெளிவந்த ‘ஜீரோ’ என்ற படமும் மிகவும்
மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஷாருக்கான் கடைசியாக கொடுத்த ஹிட் படம் என்றால் சென்னை எக்ஸ்பிரஸ் தான். இதைத் தொடர்ந்து ஐந்து தோல்விப் படங்களை கொடுத்த அந்தப் பட்டியலில் தற்போது ‘ஜீரோ’வும் இணைந்து விட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker