Latestஉலகம்

இளவரசி மேகன் மனம் மாறினார்: வேட்டைக்குச் செல்ல ஹர்ரிக்கு அனுமதி

லண்டன், டிசம். 23- கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரே தனது கணவருக்கு பெரிய கிறிஸ்துமஸ் பரிசாக அவரது பாரம்பரிய வேட்டைக்கு அனுமதி அளித்துள்ளார் இளவரசி மேகன் மெர்க்கல்.

வழக்கமாக ‘பாக்ஸிங்’ தினத்தன்று தனது குடும்பத்தாருடன் வேட்டைக்கு செல்லும் பிரிட்டன் இளவரசர் ஹர்ரி இம்முறை வேட்டைக்குச் செல்லப் போவதில்லை என்றும் மேகன் விலங்குகள் நல அபிமானி என்றும் கூறப்பட்டது. அதனாலேயே ஹர்ரி இந்த ஆண்டு வேட்டைக்கு செல்வதை ரத்து செய்து விட்டார்.

அதனால் அவரது சகோதரர் வில்லியம் மன வருத்தத்தில் இருக்கிறார் என்று பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதெல்லாம் வதந்தி என்றும் ஹர்ரி தனது
குடும்பத்தாருடன் வேட்டைக்கு செல்வதில் தனக்கு மகிழ்ச்சியே என்று தெளிவாக கூறிவிட்டதாக அரண்மனை வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹர்ரி திருமணத்திற்கு பின்னர் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்றதை மேகன் அறிந்துள்ளார், அதனால் ஆண்டு துவக்கத்தில் வேட்டைக்காவே ஒரு ‘லாப்ராடர்’ நாய்க்குட்டியை மேகன் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.

இச்செய்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு ஹர்ரி இனி வேட்டைக்கு வரமாட்டோரோ என்ற கவலையில் இருந்த அவரது வேட்டைக்கார நண்பரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஹர்ரி பாக்ஸிங் தினத்திற்கு வேட்டைக்கு செல்லாததை பெரிது படுத்தியிருந்த பிரிட்டன் பத்திரிகைகள் தற்போது எதனால் அவர் அவ்வாறு முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை என்று விமர்சித்து உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker