Latestஉலகம்

கடலடி நிலச் சரிவினால் சுனாமி: ஜாவா -சுமத்ராவில் பலர் பலி!

ஜக்கர்த்தா, டிசம். 23- கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பும் அதனைத் தொடர்ந்து நடந்த கடலடி நிலச் சரிவின் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுப் பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் மாண்டுள்ளனர்.

இந்த சுனாமியில் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இந்தோனிசிய பேரிடர் நிவாரண மையம் அறிவித்தது.

சுண்டா நீரிணையை ஒட்டிய கடலோரப் பகுதிக ளை இந்த சுனாமி தாக்கியதாக பேரிடர் மையப் பேச்சாளர் சுடோப்போ புர்வோ சொன்னார். சுனாமியில் காணாமல் போனவர்களின் மிக அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சுனாமி காரணமாக தங்களுடைய இருப்பிடங்களை இழந்தவர்களும் அங்கிருந்து வெளியேறியவர்களும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker