Latestமலேசியா

மனைவிக்கு பரிசளிக்க முக ஒப்பனை பொருட்களை திருடிய ஆடவன் கைது!

பாயான் பாரு,டிச.23- இரண்டு நாட்களுக்கு முன் பேரங்காடி ஒன்றில் பெண்கள் பயன்படுத்தும் முக ஒப்பனை பொருட்களைத் திருடிய ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக சன்ஷைன் பேரங்காடியில் அவன் 11 வகை முக ஒப்பனை பொருட்களை திருடியுள்ளான்.

நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் பேரங்காடிக்கு வந்திருந்த அந்த ஆடவனின் செயல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், பேரங்காடியின் பாதுகாவலர் அவனிடம் இருந்த பைகளைச் சோதனையிட்டார்.

சோதனையிட்டதில், அந்த ஆடவன் வைத்திருந்த பையில் முக ஒப்பனை பொருட்கள் இருந்திருக்கின்றன. அவற்றை வாங்கியதற்கான ரசீதும் அவனிடம் இல்லை.

எனவே, தாமான் மசூரியைச் சேர்ந்த அந்த ஆடவனை பேரங்காடி தரப்பினர் போலீசிடம் ஒப்படைத்ததாக பாராட் டாயா மாவட்ட போலிஸ் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவன் திருடிய பொருட்களின் விலை 314 ரிங்கிட் 36 சென் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker