Latestமலேசியா

கிள்ளானில் திருநங்கை அடித்துக் கொலை: நால்வர் மீது குற்றச்சாட்டு!

கிள்ளான், டிசம். 24- இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்குள்ள புக்கிட் திங்கியில் திருநங்கை ஒருவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் தொடர்பில் நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப் பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் சோலாஹா நூராதிக்கா முன்னிலையில் இந்த நால்வருக்கும் எதிரான கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அந்தக் குற்றச்சாட்டுக்களைத் தாங்கள் புரிந்து கொண்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இவர்களில் இருவர் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்கள் ஆவர். மூன்றாம் நபர் 21 வயதுடைய லோவ் ஷி ஹார் மற்றும் நான்காம் நபர் 19 வயதுடைய டான் கிம் சியாங் என்பவராவார்.

இவர்கள் நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி புக்கிட் திங்கியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் முன்புறம் காலை 7 மணியளவில் அந்த திருநங்கையை, இன்னமும் தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபருடன் சேர்ந்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டது.

குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுதரப்பில் இந்த வழக்கில் ஃபிர்டாஸ் இட்ரிஸ் ஆஜரான வேளையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் சார்பில் அக்மால் ஜூசோ, எம். வரலெட்சுமி மற்றும் ஜி.சந்தியாகோ ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராயினர். குற்றப்பட்டுள்ள எவருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. வழக்கு மீண்டும் ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker