Latestமலேசியா

அவதூறு பேசுவதா? அஸ்வான்டின் மீது திரேசா கோக் ரிம. 30 மில்லியன் இழப்பீடு வழக்கு!

கோலாலம்பூர், டிசம். 26- தம்மைப் பற்றி அவதூறு பேசியமைக்காக அடுத்த 7 நாள்களுக்குள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இழப்பீடாக 30 மில்லியன் ரிங்கிட் தரப்பட வேண்டும் என்றும் ஜாரிங்கான் மலாயு மலேசியா அமைப்பின் மீதும் அதன் தலைவரான அஸ்வான்டின் ஹம்சா மீதும் மூலத்தொழில் அமைச்சர் திரேசா கோக் வழக்கு நோட்டிஸ் அனுப்பு உள்ளார்.

சீபில்டு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரம் தொடர்பாக நேற்று கிள்ளானில் நடந்த ஒரு பேரணியில் பேசிய அஸ்வானுடின், கோயில் நிலத்துடன் சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருடன் திரேசா கோக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் அவர் ஒரு நேர்மையற்ற அமைச்சர் என்றும் அவர் சாடியிருந்தார்.

இந்தக் கூற்று தமக்கு எதிரான அவதூறு எனச் சுட்டிக்காட்டிய திரேசா கோக், தமது வழக்கறிஞர் எஸ்.என். நாயர் மூலம் வழக்கு நோட்டீஸை அஸ்வான்டினுக்கு அனுப்பியுள்ளார்.

இதற்காக அவர் உடனடியாக பத்திரிகைகளில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அடுத்த 7 நாள்களுக்குள் பொதுமன்னிப்புக் கேடக வேண்டும். மேலும் 30 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தரப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

 

 

Read more at https://www.thestar.com.my/news/nation/2018/12/26/teresa-kok-demands-apology-and-rm30mil-jmm-president/#CwEvJYDhcFvzmGL5.99

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker