Latestமலேசியா

அடிப் மரணம்: விசாரணை நடத்த நீதிமன்றத்திற்கு தோம்மி தோமஸ் உத்தரவு!

கோலாலம்பூர்,டிச.27- தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்திற்கு அரசாங்கம் உத்தரவிடவுள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

இதனை தம்மிடம் அட்டர்னி ஜெனரல் தோம்மி தோமஸ் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரையில் போலீசார் பல கோணங்களில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அடிப்பின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவுள்ளது. அதற்கு, சீபீல்ட் கலவரத்தில் இருந்த நபர்களின் வாக்குமூலப் பதிவுகள், தடயவியல் சோதனைகள் என்று சிலவற்றை போலீஸ் நீதிமன்றத்தில் கூடிய விரைவில் சமர்பிக்கவுள்ளது.

ஆகையால், தோம்மி தோமஸ் அடிப்பின் மரண வழக்கை விசாரிக்குமாறு நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவார் என்று மொகிடின் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளார்.

நவம்பர் 27-ஆம் தேதி சீபீல்ட் ஆலய கலவரத்தில் 24 வயது அடிப் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய இருதயக் கழகத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker