Latestமலேசியா

கூட்டரசு பிரதேச இந்துக் கோயில்கள் DBKL-இல் பதிந்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர்,டிச.27- கூட்டரசு பிரதேசத்தில் உள்ள இந்துக் கோயில்களை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கோயில்களின் நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், அவை யாருடைய பொறுப்பில் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை கண்டறிவதற்காகவும் அப்பதிவு தேவைப்படுவதாக கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாரூடின் முகமட் சால்லே தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இன்னும் பதிவு செய்யப்படாமலே செயல்படும் கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க அது உதவும் என்றார் அவர். இன்னும் பதிவு செய்யாமலும், யாரும் நிர்வகிக்காமலும் இருக்கும் கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்நிலையில், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் பதிவு செய்து கொள்வதற்கான இறுதி நாள் இன்னும் முடிவாகவில்லை. அது இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker