Latestமலேசியா

சீபீல்ட் கலவரம்: சாட்சி சொல்ல வருவோரைதான் போலீஸ் கைது செய்கிறதே!- இளங்கோவன் சாடல்

கோலாலம்பூர்,டிச.27- போலீஸ் கைது செய்துவிடுமோ என்ற பயத்தில் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் சாட்சி சொல்ல பலரும் முன்வரத் தயங்குகிறார்கள் என்று அவ்வாலயத்தின் சமூக ஆர்வலர் ஏ.இளங்கோவன் கூறினார். இதற்கு முன் சாட்சி சொல்ல முன்வந்தவர்களை போலீஸ் கைது செய்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

“கலவம் தொடர்பில் நிறைய பேர் வீடியோக்களுடன் அதிகமான ஆதாரங்கள் வைத்திருந்தனர். ஆனால், போலீஸ் கைது செய்துவிடும் என்பதற்காகவே அவர்கள் சாட்சி சொல்ல முன்வர மறுக்கிறார்கள்.

“சமூக ஊடகங்களில் வெளியான படங்களை எடுத்து அதில் உள்ளவர்கள் விசாரணைக்கு வர வேண்டும் என்றனர். அதை அடுத்து, விசாரணைக்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று கோலாலம்பூரிலுள்ள மனித உரிமை ஆணையத்திடம் (Suhakam) மகஜர் ஒன்றை சமர்பிக்க வந்திருந்த இளங்கோவன் தெரிவித்தார்.

கலவம் தொடர்பில் பேஸ்புக் நேரலை செய்தவர்கள் உட்பட 30-லிருந்து 35 பேரை விசாரணைக்கு அழைத்து பின்னர் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார். அவர்களில் பலரும் 3-லிருந்து 11 நாட்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றார் அவர்.

இந்நிலையில், போலீசிடம் சீபீல்ட் ஆலயக் கலவரம் தொடர்பில் சாட்சியம் அளிக்கச் செல்பவர்களை Suhakam தற்காக்க வேண்டி இளங்கோவன் ஓர் அணியினருடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட மகஜரை அவ்வாணையத்திடம் கையளித்தார். அதுமட்டுமின்றி, மக்களிடமிருந்து கலவரம் குறித்த காணொளிகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, சீபீல்ட் ஆலயக் கலவரம் சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணையில் தமது தரப்பு தலையிட முடியாது என்று  Suhakam தலைவர் ரஸாலி இஸ்மாயில் இளங்கோவன் தரப்பிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆனால், போலீசிடம் ஒப்படைக்க வேண்டிய காணொளிகளை வேண்டுமானால் பெற்றுக் கொள்கிறோம் என்று அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

எனவே, சீபீல்ட் கலவரம் தொடர்பான காணொளிகளை வைத்திருக்கும் மக்கள் தன்னிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். காணொளிகளை தன்னிடம் தருவோரின் எந்தத் தகவலும் வெளியிடப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார். மேல் விவரங்களுக்கு இளங்கோவனை 017-2991724 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker