Latestசினிமா

‘மிஷ்கினிடம் ரூ. 1 கோடியை இழந்தேன்!’ – இளம் நடிகர் மைத்ரேயா

சென்னை, டிசம். 27- “என்னிடம் சொன்ன கதையை, வேறொரு நடிகரை வைத்து இயக்கி வரும் மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து ஏமாந்து விட்டதாக இளம் நடிகர் மைத்ரேயா புகார் தெரிவித்துள்ளார்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கினுக்கு எதிராக புதுமுக நடிகரான மைத்ரேயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றி விட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக  குற்றஞ்சாட்டியுள்ளார்.

மைத்ரேயாவின் மனுவை ஏற்று “கிரைம் திரில்லர்” படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மிஷ்கினுடன் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என சத்தியம் செய்தார்.

இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கிறார். எங்கள் படத்துக்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி ஒரு கோடியை ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம்.

பலமுறை பேச முயற்சித்தோம். அவர் முன்வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

எனவே நீதிமன்றத்திற்குச் சென்றேன். விஷால் எனக்கு உதவுவதாக கூறியுள்ளார். நான் அடுத்து ஜி. என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். -இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker