Latestமலேசியா

KFC விலை உயர்வா? SST காரணமா?

புத்ராஜெயா,டிச.27- KFC-யின் விலையேற்றம்தான் இன்றைய பரபரப்பான செய்தியாக இருக்கிறது. ஆம், மலேசியர்கள் விரும்பி உண்ணும் துரித உணவல்லவா KFC! KFC விலை ஏற்றம் கண்டுவிட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில் மற்றொரு துரித உணவான McDonalds-சும் விலையேற்றம் கண்டுள்ளதாக ஆஸ்ட்ரோ அவானி மேற்கொண்ட கண்டோட்டத்தில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, உண்மையாகவே அவ்விரு உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சின் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் களமிறங்கி இருப்பதாக அவ்வமைச்சின் அமலாக்க துணைத் தலைமை இயக்குநர் டத்தோ இஸ்காண்டர் ஹலிம் சுலைமான் தெரிவித்தார்.

“இன்று காலையிலேயே சோதனை நடவடிக்கையைத் தொடங்கி விட்டோம். ஏன் விலை உயர்த்தப்பட்டது குறித்த தகவலையும் KFC–யிடமிருந்து பெற்றிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“எங்கள் உணவுகள் SST வரி காரணமாக விலை ஏற்றப்படவில்லை. இதற்கு முன்பும் எங்கள் கட்டணத்தில் SST வரி சேர்க்கப்பட்டிருந்தது. SST வரி விதிப்பால் தான் KFC-யின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தவறாக புரிந்துக்கொள்ளப் பட்டுள்ளது” என்று KFC–யின் உரிமையாளரான QSR BRANDS நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக
டத்தோ இஸ்காண்டர் தெரிவித்தார்.

KFC–யின் விலையேற்றம் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அரசு கொண்டு வந்த SST வரி விதிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker