Latestசினிமா

அரசியலுக்காக சினிமாவை பயன்படுத்த மாட்டேன்! -குஷ்பு கூறுகிறார்

சென்னை, டிசம். 28- அரசியல், சினிமா என பல வகையிலும் பரபரப்பாக இருக்கும் நடிகை குஷ்பு தற்போது ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ என்ற சீரியலில் நடிக்கிறார்.

சினிமா, சீரியல் குறித்து அவரது அனுபவங்களை இவ்வாறு கூறுகிறார்: ஐந்தாண்டுகளுக்கு பின் முழு வேகத்துடன் சீரியலில் நடிக்கிறேன். கடைசியாக 2014 இல் சீரியலில் நடித்தேன். இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது.

முழுப் பொறுப்பையும் சுந்தர்.சி என் தலையில் போட்டு விட்டார். லாப நஷ்டம் அனைத்திற்கும் நானே பொறுப்பென ஏற்றுக் கொண்டேன். குடும்ப பாங்கான கதை, புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன்.

தொடருக்காக பிரமாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. சினிமாவுக்கு இணையாக 2 கோடி ரூபாய்க்கு அது அமைந்துள்ளது. மனதிற்கு நிறைவாக உள்ளது.

என் அரசியல் வாழ்க்கைக்காக சினிமா மற்றும் சீரியலை பயன்படுத்த மாட்டேன். பொது வாழ்க்கை வேறு. தொழில் வேறு. அரசியலுக்காக எந்த பாத்திரத்தையும் சீரியலில் உருவாக்குவதில்லை.

அதுபோல சினிமாவில் வயதுக்கேற்ற பாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். இயக்குனரிடமும் சொல்லிவிட்டேன். இந்த வயதில் காதல் காட்சிகள் எல்லாம் நமக்கு ‘செட்’ ஆகாது என்று.

வீட்டில் எல்லா வேலையையும் நான் தான் செய்வேன். எந்த மூலையில் தூசி, குப்பை இருந்தாலும் என் கண்ணில் பட்டு விடும். என்னைப் பார்த்தால் வீட்டில் எல்லாருக்கும் பயம் உண்டு.

அது போல தமிழ் மொழி கற்றுக் கொள்வதில் அப்போதே ஆர்வம் கொண்டேன். மொழி தெரியவில்லை என்றால் தொழிலுக்கு துரோகம் செய்வது போல் இருக்கும். மொழி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனது பழைய டிரைவர் மூர்த்தி தான் எனக்கு நாளிதழ்களை வாங்கி கொடுத்து தமிழ்க் கற்றுக் கொடுத்தார்.

அதிலிருந்து தமிழ் மொழியை மேம்படுத்திக் கொண்டேன். அது போல எனக்கு தெரிந்து வேற்று மொழிகளைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு என சிறப்பாக  பேசுவார். இவ்வாறு குஷ்பு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker