Latestமலேசியா

அரசியலுக்கு வரத் தயாரா? ஜொகூர் இளவரசருக்கு கைருடின் சவால்!

கோலாலம்பூர், டிசம். 28- தங்களுடைய அரச அரியணை அந்தஸ்தை விட்டுக் கொடுத்துவிட்டு, முழு நேர அரசியலுக்கு வரத் தயாரா? என்று ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிற்கு அமானா கட்சியைச் சேர்ந்த கைருடின் அபு ஹசான் சவால் விடுத்துள்ளார்.

அரசியலில் நீங்கள் சிறந்து விளங்குவதாக கருதினால், தொடர்ந்து அரசியல் அறிக்கைகளை விடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தால், உங்களின் பட்டத்து இளவரசர் அந்தஸ்தை விட்டுக் கொடுத்து விட்டு அரசியல் அரங்கத்தில் இறங்கலாம் டிஎம்ஜே என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜோகூர் இளவரசரைக் கேட்டுக் கொண்டார் கைருடின்.

பொதுமக்களின் விமர்சனங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அரச அந்தஸ்து எனும் பாதுகாப்புக்குள் அவர் தொடர்ந்து இருக்கக் கூடாது என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் அரசியல் தன்மை கொண்ட அறிக்கைகளை அடிக்கடி ஜொகூர் இளவரசர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த பொதுத்தேர்தல் தருணத்தில் பிரிபூமி பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர் குறித்து கடுமையான கருத்துக்களை ஜொகூர் இளவரசர் முன்வைத்ததாக மலேசிய கினியின் செய்தி ஒன்று கூறுகிறது.

தற்போது இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சையட் சடிக்கிற்கு எதிராக அடிக்கடி ஜொகூர் இளவரசர் சாடி வருகிறார்.

ஜொகூர் இளவரசரின் இத்தகைய அரசியல் கருத்துக்கள் அரச அமைப்பின் மீது தவறான என்ணத்தை தோற்றுவிக்கும் என்று கைருடின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker