Latestமலேசியா

எங்கு நான் போட்டியிடுவேனோ என்று ஜசெகவுக்கு பயம்!- சிவராஜ்

கோலாலம்பூர்,டிச.28- “வரும் ஜனவரி 26-ஆம் தேதி மறுதேர்தல் காணவிருக்கும் கேமரன் மலையில் எங்கு நான் போட்டியிட்டு மீண்டும் அத்தொகுதியை வெற்றிக் கொண்டு விடுவேனோ என்று ஜசெகவுக்கு பயம்” என்று கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் கூறியுள்ளார்.

கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளதோடு, தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ளவோ, எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கவோ மற்றும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து சிவராஜ் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

“ஜசெகவுக்கு நான் போட்டியிடுவேன் என்று பயம். இதை தவிர சொல்வதற்கு எனக்கு வேறு ஏதும் இல்லை.

“மஇகாவில் சில தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்று கட்சிதான் முடிவு செய்யும்” என்று அவர் மலேசியகேஸர்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது கேமரன் மலையில் இடம்பெற்ற ஐந்து முனைப் போட்டியில் சிவராஜ் 10,307 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் மனோகரன் 9,710 வாக்குகள் பெற்றார். மொத்தம் 597 வாக்குகள் வித்தியாசத்தில் சிவராஜ் வென்றார்.

மேலும் இதில் போட்டியிட்ட பாஸ் கட்சி 3,587 வாக்குகளும் பிஎஸ்எம் கட்சி 680 வாக்குகளும் பெர்ஜசா கட்சி 81 வாக்குகளும் பெற்றன.

அத்தொகுதியில் சிவராஜ் வென்றதன் பின்னணியில் ஊழல் நடைமுறை கையாளப்பட்டுள்ளது என்பதால் அத்தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டு, தொகுதி காலியாகி விட்டதாக தேர்தல் சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker