Latestமலேசியா

கே.எப்.சி.-மெக்டொனாட்ஸ் விலையேற்றம்; அமைச்சு சோதனை!

கோலாலம்பூர், டிசம்.28- தங்களின் துரித வகை உணவுகளுக்கான விலையை உயர்த்தி இருப்பது மீதான புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி கென்டக்கி பிரைட் சிக்கன்(KFC) மற்றும் மெக்டொனால்ட்ஸ் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நேற்று முதல் கே.எப்.சி. மையங்களில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அதிகாரிகள் சோதனைகளைத் தொடங்கி விட்டனர் என்று அதன் அமலாக்கத் துறை துணை இயக்குனர் டத்தோ இஸ்கந்தார் சுலைமான் தெரிவித்தார்.

பல இடங்களில் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். விலையேற்றம் குறித்து விளக்கங்களைக் கோரினர். மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

மேலும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உணவக மையங்களிடமிருந்தும் இந்த விலையேற்றம் தொடர்பாக தாங்கள் விளக்கங்கள் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இம்மாதம் 6 விழுக்காடு எஸ்.எஸ்.டி வரி அமலாக்கம் செய்யப்படுவதைத் தொடர்ந்து கே.எப்.சி. தனது உணவுப் பொருள்களின் விலையை உயர்த்தி இருப்பதாக அந்த உணவகங்களின் உரிமம் பெற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகம்மட் அஷாஹரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker