Latestமலேசியா

பாலியல் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய பாதிரியார்!

பட்டர்வொர்த், டிச.28- 24 வயது பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட 59 வயது பாதிரியார் ஒருவர், தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து, மேல் விசாரணை கோரினார்.

பிறையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றில், கடந்த 1-ஆம் தேதி, அந்தப் பெண்ணிடம், அந்தப் ‘பாதிரியார் பாலியல் ரீதியில் தவறாக நடந்துக் கொண்டதாக, குற்றவியல் சட்டத்தின் 377 பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனமானால், அவருக்கு 30 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப் படலாம்.

ஊய் கியான் லாய் என்ற அந்தப் பாதிரியாருக்கு நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு, மூட்டு வலி மற்றும் மங்கிய பார்வை கொண்டுள்ளதாக, அவரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி நோர் அய்னி யூசோப், ரிம.15,000 ஜாமின் தொகையில், ஒருவரின் உத்தரவாதத்தின் கீழ் ஜாமின் அனுமதித்தார்.

இதனிடையில், பாதிக்கப் பட்ட அந்தப் பெண்ணை தொடர்புக் கொள்ளவோ, அல்லது சந்திக்கவோ ஊய் முயற்சிக்கக் கூடாது என்று நீதிபதி எச்சரித்தார். அந்த வழக்கு ஜனவரி 29-ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று அவர் அறிவித்தார்.

கடந்த 1-ஆம் தேதியன்று, தனது கால், மூட்டு வலி பிரச்சனைக்கு சிகிச்சை எடுப்பதற்காக, குமாஸ்தாவாக வேலை செய்யும் அந்தப் பெண், அந்தப் பாதிரியாரின் வீட்டிற்கு சென்ற போது இந்தச் சமபவம் நடந்ததாக செப்பராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ரோஸ் அஸான் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker