Latestஇந்தியா

பொதுத் தேர்தலுக்கு தயாராகிறார் மோடி! பயணங்கள் தள்ளிவைப்பு!

புதுடில்லி, டிசம்.28- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தல் முடியும் வரை பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்வதை ஒத்தி வைத்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அடுத்த சில மாதங்ளுக்கு மோடியின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிய வருகிறது.

கடந்த 2014 ஜூன் மாதம் முதல் இதுவரை மொத்தம் 48 முறை வெளிநாடுகளுக்கு போய் வந்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தல் வரவுள்ளது.

தமிழகத்திற்கும் சட்டசபைத் தேர்தல் வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை பிரதமரிடம் வெளிநாட்டுப் பயண திட்டம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர் வெளிநாட்டுப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி விட்டதால் உள்ளூர்த் பிரச்சனைகள் பக்கம் அவர் திரும்புவார்.

இல்லாவிட்டால் தேர்தலின் போது இது ஒரு பெரும் பிரச்சனையாக கிளம்பிவிடும் என பாஜகா அஞ்சுகிறது.
பாஜகா தற்போது பெரும் சவலான சூழலில் உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி, மக்களிடையே பாஜக மீது கடும் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி விட்டது.

இதனால் இதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தேடிக் கொண்டுள்ளது பாஜகா. மறுபக்கம் கிட்டத்தட்ட எல்லா மாநிலத்திலும் பாஜகாவுக்கு மக்கள் மத்தியில் ஏதாவது ஒரு வகையில் கெட்ட பெயர் அதிகரித்துள்ளது. அதையும் சரி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker