Latestஇந்தியாஉலகம்சினிமா

ரஜினியின் ‘பேட்ட’ டிரைலர் பரபரப்பு வெளியீடு!- (video)

சென்னை,டிச.28- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த டிரைலரைப் பார்த்தவர்களின் எண்ணிகை சிறிது நேரத்திலேயே பல லட்சங்களைத் தாண்டியுள்ளது.

நேற்று இந்த படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அத்திரைப்படத்தில் ரஜினி பேசும் ஒரு சில “பஞ்ச் வசனங்கள்” சமூக வலைத்தளங்களில் கசிந்து விட்டதை அடுத்து, படக்குழுவினர் காலை 10.25 மணிக்கெல்லாம் டிரைலரை வெளியிட்டு விட்டனர்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மற்றும் ரோபோ ஷங்கர் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் ரஜினி பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதே போல பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் அடித்து தூள் கிளப்பி விட்டது.

இவைகளை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் டிரைலர் படு மாஸாக வெளியாகி உள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker