Latestமலேசியா

அன்வாரின் நியமனங்கள்: அஸ்மின் எதிர்ப்பு!

கோலாலம்பூர்,டிச.29- பிகேஆரின் முக்கியத் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கான நியமனத்தை மீண்டும் மறுஆய்வு செய்யுமாறு அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி, தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டத்தோஶ்ரீ அன்வார் கட்சியின் சில பொறுப்புகளுக்கான நியமனங்களை நேற்று அறிவித்ததை அடுத்து, அஸ்மின் அலி இவ்வாறு கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை அந்தப் பொறுப்புகளுக்கு நியமித்திருப்பது கட்சியின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு உதவாது என்று அவர் கருத்துரைத்துள்ளார்.

உதாரணமாக, கட்சியின் தலைமைச் செயலாளர் பதவி என்பது நிர்வாகத் திறன்மிக்கவருக்கு அளிக்கப்பட வேண்டிய பொறுப்பு என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சருமான அஸ்மின் அலி சுட்டிக் காட்டினார்.

இது குறித்து சென்ற வாரமே தாம் அன்வாரிடம் கலந்து பேசிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பாண்டான் தொகுதியின் முன்னாள் எம்பி ரபிஸி ரம்லி பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமனம் பெற்றுள்ளார். அவருடன் தஞ்சோங் மாலிம் எம்பி சாங் லீ காங், சாராத்தோப் எம்பி அலி பிஜு ஆகியோரும் கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமனம் பெற்றுள்ளனர்.

ஹங் துவா ஜெயா எம்பி டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் கட்சியின் தகவல் குழுத் தலைவராகவும், செத்தியாவங்சா எம்பி நிக் நஸ்மி நிக் அகமது கட்சியின் மேற்பார்வை செயலாளராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் பிகேஆர் தலைமைச் செயலாளராக நீடிக்கும் வேளையில் பிகேஆர் தேசிய பொருளாளராக செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் நியமனம் பெற்றுள்ளார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண் சந்தாரா பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளராகவும் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் துணையமைச்சர் சிம் சீ சின், எஸ்.மணிவண்ணன் ஆகியோர் கட்சியின் தகவல் குழு துணைத் தலைவராக நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker