Latestஉலகம்

‘சதிகளை அம்பலமாக்குவேன்!’ மைத்திரி- மகிந்தாவுக்கு பீதியை கிளப்பிய ரணில்

கொழும்பு, டிசம். 29- அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக “அக்டோபர் 26” அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில், ‘அக்டோபர் 26’- சூழ்ச்சியின் பின்னணியில் மைத்திரி- மகிந்தா மட்டும் தொடர்புபடவில்லை. அவர்கள் இருவரின் முழுக் குடும்பமும் அந்த அரசியல் சூழ்ச்சியுடன் தொடர்பு பட்டுள்ளது.

அத்துடன் , மகிந்தா அணியை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரின் விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன்.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சிலருக்கு இந்த அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்குண்டு இறுதியில் தப்பியுள்ளனர். கட்சியின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு அவர்களின் விபரங்களை வெளியிடமாட்டேன்.

அந்த அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர எமது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கடினமாக உழைத்தனர்.

நீதித்துறையின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்து செயற்பட்டார்கள் அவர்களின் எண்ணத்தின்படி நாம் வெற்றியடைந்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி சர்வதிகாரம் தோற்கடிக்கப்பட்டு ஐனநாயகம் வென்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker