Latestஇந்தியா

சிறார் பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை! இந்தியா முடிவு

புதுடில்லி, டிசம். 29- சிறார்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை புரிபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அந்தத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

சிறார்கள் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்பதை குறிக்கோளாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பாலின நடுநிலையுடன் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை இந்த சட்டம் பாதுகாக்கிறது.

இயற்கை பேரிடர்களின் போது சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதில் இருந்து தடுப்பதற்கும்- சிறுமிகள் விரைவில் பூப்பெய்துவதற்காக மருந்துகளை கொடுப்பதைத் தடுப்பதற்கும் போக்சோ சட்டத்தின் 9 ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

சிறார்கள் ஆபாசப் படங்களை தடுப்பதற்கு வகை செய்கிறது. சிறார்களின் ஆபாசப் படங்களை அழிக்காமல் இருந்தால் சிறை தண்டனையுடன் அதிக அபராதமும் அல்லது இரண்டில் ஒன்றோ விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker