Latestசினிமா

கடையில் வாழைப்பழம் திருடியதை ஒப்புக்கொண்ட திரிஷா!

சென்னை, டிசம்.30- கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ச் சினிமாவில் முன்னணியில் நட்சத்திரமாக விளங்கும் நடிகை திரிஷா கடையில் வாழைப்பழம் திருடிய சம்பவத்தை இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தில் திரிஷா நடித்துள்ளார். அதன் வெளியீட்டுக்காக தற்போது காத்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அவர் பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் தோழி ஒருவருடன் சேர்த்து திருடினேன் என ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளியே சென்ற அவர்கள் கையில் காசு எதுவும் இல்லாததால் ஒரு கடைக்குள் புகுந்து 2 டாலர் மதிப்புள்ள சாக்லேட் மற்றும் வாழைப்பழத்தை திருடிக்கொண்டு ஓடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது போன்ற தவறுகளை இனி செய்யவே மாட்டேன் என திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker