Latestமலேசியா

ஜன.2-இல் பள்ளி:  கடைசி நேரத்தில் கடை கடையாய் அலைமோதும் பெற்றோர்கள்!

கோலாலம்பூர், டிசம். 30- ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகளுக்கான புத்தாண்டு தவணை தொடங்குகிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கான காலணிகள், சீருடைகள் மற்றும் பாட உபகரணங்கள் ஆகியவற்றை வாங்க, கடைசி நேர ஷாப்பிங்கிற்காக பேரங்காடிகளிலும் கடைகளிலும் பெற்றோர்களும் குவிந்து கிடக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறம். பள்ளிகள் தொடங்கும் நிலை மறுபுறம். வார இறுதி நாள் என்பதால் பலரும் பரபரப்பாக உள்ளனர். குறிப்பாக, சுபாங் ஜெயா, ஷா ஆலம்,கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் பெற்றோர்களின் படையெடுப்பைக் காண முடிகிறது என மலாய் மெய்ல் ஆய்வு ஒன்று கூறுகிறது.

வழக்கமாகவே, எனது பிள்ளைக்கான பள்ளி சீருடை, காலணி, உபகரணங்கள் ஆகியவர்றை நான் முன்கூட்டியே வாங்கி வைத்து விடுவேன். இந்த முறை நிறைய வேலைப்பளு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் கடைசி நேர நெரிசலில்
சிக்கிக் கொண்டேன் என்று ஷார்மிளா அன்பழகன் என்பவர் கூறினார்.

மூன்றாம் ஆண்டில் படிக்கும் மகள் கஷ்வினிக்கு பொருத்தமான சீருடை மற்றும் காலணிகளைக் கண்டுபிடிக்க தாம் மூன்று நான்கு கடைகளில் ஏறி இறங்கியதாக சொன்னார்.

பொருள்களின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. முன்பைப் போலவே இருக்கிறது. ஒருவேளை விலைகள் சற்று குறைந்திருக்கக்கூடும் என்று எதிர்பார்த்தேன் என்கிறார் ஷார்மிளா.

வழக்கமாகவே, நான் கடைசி நேரத்தில் தான் பிள்ளைகளுக்கான பள்ளி உடைகள், காலணிகள் மற்றும் இதர பாட உபகரணங்களை வாங்குவேன் என்கிறார் 3 பிள்ளைகளுக்கு தாயான சித்தி பாத்திமா ரட்மான்.

மாத இறுதியில் சம்பளத்திற்காக காத்திருந்த பின்னர் சம்பளம் கிடைத்ததும் தாம் பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்குவதால் கடைசி நேரத்தில் தான் அலைய வேண்டியிருக்கும் என்கிறார் சித்தி பாத்திமா.

மூன்று குழந்தைகளில் இருவர் பள்ளி செல்வதால் பள்ளித் தவணைக்கு ஒரு பிள்ளைக்கு குறைந்த பட்சம் 250 ரிங்கிட் செலவாகும் என்கிறார் அவர்.

எல்லா இடங்கலிலுமே கூட்டமாக இருக்கிறது. இந்த நெரிசலில் பிள்ளைகளுக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்வது கடினமாக இருக்கிறது. அவ்வாறு கிடைக்காமல் வேறுவேறு கடைகளுக்கு அலைகிறேன் என்று அவர் சங்கடத்துடன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker