Latestஉலகம்

மீண்டும் ஆட்சியில் அமர அமெரிக்காவிடம் கெஞ்சிய முஷராப்!

வாஷிங்டன், டிசம். 30- மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கோரியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானின் அதிபராக 2001-2008 இல் இருந்த முன்னாள் ராணுவ தளபதியான 75 வயதுடைய பர்வேஸ் முஷராப்  தற்போது வளைகுடா நாடான துபாயில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை முடக்கியதால் முஷராப் மீது தேச துரோக வழக்குடன் பல்வேறு வழக்குகளும் அவர் மீது உள்ளதால் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு உதவும்படி அமெரிக்க எம்.பிக்களிடம் அவர் கோரியது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் குல் புஹார் இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களில், அமெரிக்க எம்பிக்கள் பலருடன் முஷராப் பேச்சு நடத்துகிறார்.

எனது அரசு அமெரிக்காவுடன் எப்போதும் இணக்கமாக இருந்துள்ளது. எனக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரவு அளித்தாலும் போதும் இவ்வாறு முஷராப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker