Latestமலேசியா

வெள்ளை நிற பள்ளி காலணிகளின் பரிதாப நிலை!

ஜார்ஜ் டவுன், டிசம்.30- பள்ளி மாணவர்கள் மத்தியில் பளிச்சிடும் வகையில் பிரபலமாக இருந்து வந்த வெள்ளைக் காலணிகளுக்கு இப்போது மதிப்பும் மரியாதையும் சரிந்து விட்டது. அதனை வாங்குவார் இல்லை. சில இடங்களில் இலவசமாக கொடுத்தாலும் ஏற்பார் இல்லை.

இங்கு டத்தோ கிராமட்டிலுள்ள யுனிஒன் கடையில் 200 ரிங்கிட்டுக்கு உரிய பொருள்கள் வாங்கினால் வெள்ளைக் காலணிகள் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் யாரும் அக்கறை காட்டவேயில்லை.

வாடிக்கையாளர்களில் சிலர், 200 ரிங்கிட்டிற்கு பொருள்கள் வாங்கிய போதிலும் அதற்கு பரிசாக இலவசமாக தரப்பட்ட வெள்ளைக் காலணிகளை அவர்கள் உதாசீனப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

பள்ளிகளில் கறுப்புக் காலணிகள் அணிய விடுக்கப்பட்டுள்ள உத்தரவு காரணமாக தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கெனவே விற்பனையில் இருந்த வெள்ளைக் காலணிகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் கடைக்காரர் கூறினார்.

பெற்றோர்கள் கறுப்புக் காலணிகளை வாங்குவதில் இப்போதே மும்முரம் காட்டுகின்றனர். இந்த கறுப்புப் பள்ளி காலணி அடுத்த ஆண்டுமுதல் கட்டாயமாகிறது என்றாலும் பெற்றோர்கள் இப்போதே பிள்ளைகளுக்கு வாங்கி தரத் தொடங்கி விட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker