Latestசினிமா

2018-இல் மட்டும் 200 தமிழ்ப் படங்கள்: சுவைத் தகவல்களின் தொகுப்பு!

சென்னை. டிசம். 30- தமிழ்ச் சினிமா 2018 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பது மீதான சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பை இங்கே காண்போம்:
1. கடந்த ஆண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்த நிலையில், 2018 ஆண்டில் 181 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.
2. தயாரிப்பாளர் சங்கம் படங்களை வெளியிட மறுத்தது, (பிப். 24 முதல் ஏப்.19 வரையில்) எந்த புதுப் படங்களையும் வெளியிடவில்லை.
3, சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதனால் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன.
4. தியேட்டர் கட்டணங்களுக்கு வரிவிதிப்பு மாற்றம் செய்யப்பட்டதால் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது இல்லாமல் போனது. ஆங்கிலப் பெயர்களில் படங்கள் வர ஆரம்பித்தன.
5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் காலா, 2.0 ஒரே ஆண்டில் வெளிவந்தன.
6. கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டில் விஸ்வரூபம் -2 படம் மட்டுமே வெளிவந்தது.
7. அஜித் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளிவரவில்லை
8. விஜய் நடித்த சர்கார் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 250 கோடியை வசூல் செய்தது.
9. தமிழ் சினிமாவில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படமான 2.0 நவம்பர் 29ஆம் தேதி வெளியானது.
10. அதிகப்படங்களில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, அவர் நடித்த 5 படங்கள் வெளியாகின.
11. அதிகப் படங்களில் நடித்த நடிகை வரலெட்சுமி அவர் 5 திரைப்படங்கள் நடித்து வெளிவந்தன.
12. அதிகப் படங்களுக்கு இசையமைத்த இமையமைப்பாளர் சாம்.சீ.எஸ் அவரது இசையில் 8 படங்கள் வெளிவந்தன.
13. இரண்டாம் பாகப் படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டு இது. மொத்தம் 8 இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்தன,.
14. இந்தி நடிகர் அக் ஷாய் குமார் 2.0 படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
15. குலோபாகவலி படத்தில் இடம் பெற்ற குலேபா பாடல் 8 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை யூடுயூப்பில் சாதனை படைத்தது.
16. சர்கார் டீசர் 14 லட்சம் லைக்குகளைப் பெற்று யூடியூப்பில் அதிக லைக்குகளை பெற்ற டிசர் என்ற சாதனையைப் பெற்றது. அதிகப்பார்வையாளர்களை (3 கோடியே 59 லட்சம்) பெற்று முதலிடத்தில் உள்ள டீசர் இது தான்.
17. நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.
18. மேற்கு தொடர்ச்சி படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் தயாரிப்பாளர் ஆனார்
19. தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் சர்கார் படத்திற்கு முதலிடம்.
20 பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பாளர் ஆனார்.
21. உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் 2.0 படத்திற்கு முதலிடம்
22. நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் -யுவன் கூட்டணி சேர்ந்த படம் மாரி -2 இப்படத்தில் தனுஷூக்காக இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
23. ரகுமான் உறவினர் காஷிப் இந்த ஆண்டில் வெளிவந்த காற்றின் மொழி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்.
24. இந்த ஆண்டில் 2 பெண் இசையமைப்பாளர்கள் அறிமுகம் சிவாத்மிகா( ஆண்டனி) மற்றும் ஜனனி(பிரபா)
25. பெண் இயக்குனர்களிள் கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி . பிஆர் விஜயலட்சுமி இயக்கிய அபியும் அனுவும் இந்த ஆண்டில் வெளிவந்தன.
26. இந்த ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள் இருவர் மட்டுமே விஜய். சந்தோஷ் ஜெயக்குமார் ( இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்
27. நடிகர் விஷால், நாம் இருவர் நடிகை ஸ்ருதிஹாசன் ஹாலோ சகோ மற்றும் நடிகை வரலெட்சுமி உன்னை அறிந்தால் நிகழ்ச்சிகள் மூலம் டிவியில் அறிமுகம்.
28. பாபி சிம்ஹா, பார்வதி உள்ளிட்ட பலர் திரைப்பிரபலங்கள் சினிமாவின் அடுத்தக்கட்டமான வெப்சீரிஸில் களமிறங்கினார்.
29. தமிழ்ப்படங்களில் நடித்த நடிகைகள் ஸ்ரேயா,,பாவானா, இஷாரா , பிரியங்கா சோப்ரா,சுவாதி, சுஜா வருணி, நடிகர் அசோக் , கதிர் ஆகியோருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடந்தேறியது.
30 பிரேமம் படப்புகழ் நடிகை சாய் பல்லவி தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம். -தொடரும்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker