Latestமலேசியா

அஸ்வான்டின் மீது மேலும் ஒரு ஜசெக தலைவர் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்!

கோலாலம்பூர், டிச.31- மலாய் ஆதரவாளரான அஸ்வான்டின் மீது, ஜசெக கட்சி தலைவர்களில் ஒருவரும், தற்காப்பு அமைச்சின் துணை அமைச்சருமான லீவ் சிங் தொங் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜாரிஙான் மெலாயு மலேசியா எனப்படும் முகநூல் பக்கத்தில், லீவ் தற்காப்பு அமைச்சின் துணை அமைச்சராக பதவி ஏற்றிருப்பதால், நாட்டிற்கு ஆபத்து நேரும் வாய்ப்பு உள்ளது என்று, அஸ்வான்டின் கருத்து தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக, லீவ்வின் வழக்கறிஞர் ராம் கர்பால் சிங் கூறினார்.

மலாய் இராணுவ வீரர்களின் முன்னிலையில் ‘கம்யூனீஸ்ட்’ சீருடை அணிந்து, அந்த இராணுவ வீரர்களை லீவ் அவமதிக்கும் வகையில் நடந்துக் கொண்டார் என்று அஸ்வான்டின் அந்த முகநூல் பக்க வலைத்தளத்தில் எழுதி இருந்தார்.

அதுமட்டுமல்லாது, செனட்டராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் லீவ், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 27-ஆம் தேதியன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், அஸ்வான்டின் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளதாகவும், அவ்வழக்கு ஜனவரி 29-ஆம் தேதியன்று விசாரணைக்கு உட்படுத்தப் படும் என்றும் ராம் கர்பால் தெரிவித்துக் கொண்டார்.

இதேப் போன்று எதிர்காலத்தில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில், அஸ்வான்டின் எங்கும் எதையும் எழுதக் கூடாது என்ற அடிப்படையில், அவர் மீது லீவ் ரிம.20 மில்லியன் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker