Latestமலேசியா

2019-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்! -லிம் குவான் எங் கருத்து

கோலாலம்பூர், டிச.31- பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் புதிய அரசாங்கமாக பொறுப்பேற்றிருக்கும் போதிலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 250 விழுக்காடு அதிகரித்து, ரிம.49 பில்லியனாக உள்ளது என்றும், நாட்டின் ஏற்றுமதி தொகை ரிம.96.4 பில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், நாட்டின் பணவீக்கம் 1.2 விழுக்காடு மட்டும் தான் பதிவாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

“மலேசியாவை விட, உலகப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், நாட்டு மக்கள் அனைவரும் இன மத பேதம் பாராமல் ஒற்றுமையாக, பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்ற அரசாங்கம் பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார். புதிய அரசாங்கமான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, மக்களின் அரசாங்கம் என்றும், நமதின் எதிர்கால நலனுக்காக நாம் அனைவரும் இந்தப் புத்தாண்டு தொடங்கி உழைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker