Latestஇந்தியா

கருணாநிதியின் தொகுதியில் ஜன. 28-இல் இடைத்தேர்தல்!

சென்னை, ஜன.1- ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி பலமுறை எம்.எல்.ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். அதன் பின் ஜனவரி 31 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker