Latestமலேசியா

கேமரன் மலைத் தேர்தல்; மஇகாவுக்கே சாதகம் என்கிறார் லிம்

ஜார்ஜ்டவுன், ஜன.1- ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில் ஜசெக கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒப்புக்கொண்டார்.

கேமரன் மலைத் தொகுதியை மஇகா நீண்ட காலமாகவே தன் வசம் வைத்து வந்திருப்பதால் நிலைமை அதற்குச் சாதகமாகவே இருந்து வரும் என்று நிதியமைச்சருமான லிம் குவான் எங் சொன்னார்.

இந்தத் தொகுதியை இதற்கு முன்னர் ஜசெக வென்றதே இல்லை. தற்போது நிலைமை மஇகாவுக்குச் சாதகமாக இருந்தாலும் கேமரன் மலைத் தொகுதியை வென்று தாங்கள் புதிய வரலாறை ஏற்படுத்த கடுமையாக முயற்சிக்கப் போவதாக அவர் சொன்னார்.

ஜசெக வென்றால் அங்குள்ள மக்கள் நிலையான பொருளாதார மேம்பாட்டினை அனுபவிக்கும் படி செய்வோம். மேம்பாடு என்பது தொடர்ச்சியான, நிலையான தன்மையைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்றார் அவர்.

இவ்வாரத்தில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கூடி கேமரன்மலையில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து பின்னர் அறிவிக்கும் என்று லிம் தெரிவித்தார்.

இதந்தொகுதியில் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின் போது 597 வாக்குகள் வித்தியாசத்தில் மஇகா வேட்பாளர் டத்தோ சிவராஜ், ஜசெக வேட்பாளர் மனோகரனை வென்றார்.

எனினும் பின்னர் வாக்குகளுக் குலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி மனோகரன் தேர்தல் வழக்குத் தொடுத்ததை அடுத்து அத்தொகுதி தேர்தல் செல்லாது எனசிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இப்போது அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker