Latestமலேசியா

அன்வார் அடுத்த பிரதமர் ஆவதைப் பற்றி என்ன நினைக்கிறார் மகாதீர்?

கோலாலம்பூர்,ஜன.2- தனக்கு பிறகு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக பதவிக்கு வருவார் என்று ஒப்புக் கொண்டாலும், அதற்கான விளக்கத்தை பிரதமர் துன் மகாதீர் இதுவரையில் அளித்ததே இல்லை.

அதாவது, பக்காத்தான் அரசாங்கத்தின் அடுத்த பிரதமர் ஆக அன்வார் ஏன் சிறந்தவர் என்பதை பற்றி கருத்துரைப்பதில் இருந்து துன் மகாதீர் விலகியே இருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில், “சின் சியூவ் டெய்லி”, “போக்கெடைம்ஸ்” ஆகிய சீனப் பத்திரிகைகள் இணைந்து பிரதமரைப் பேட்டிக் கண்டபோதும் அவர் அது தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

மாறாக, “இல்லை, நான் அன்வாரை மதிப்பீடு செய்யவில்லை. பக்காத்தான் ஹராப்பானை உருவாக்கும் சமயத்தில், எனக்கு பிறகு அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று நாங்கள் ஒப்புக் கொண்டோம்” என்று மட்டும் அவர் அப்பேட்டியின்போது கூறினார்.

“அன்வார் நல்லவரா கெட்டாவரா என்று நான் சொல்ல முடியாது. நான் விலகியதும் அவரை பிரதமர் ஆக்குவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவு. அவ்வளவுதான்” என அடுத்த பிரதமர் ஆவதற்கு அன்வார்தான் சிறந்த வேட்பாளரா என்று கேட்டபோது துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker