Latestமலேசியா

சோஸ்மா- போகா’ சட்டங்கள் நீக்கப் படாதா? அரசுக்கு சுவாராம் கண்டனம்

கோலாலம்பூர், ஜன.2- ‘போகா’ எனப்படும் குற்றச்செயல் தடுப்பு சட்டம் மற்றும் ‘சோஸ்மா’ எனப்படும் பாதுகாப்பு குற்றச்செயல் மீதான சிறப்பு நடவடிக்கை சட்டங்களை ஒரேடியாக அகற்றுவோம் என்று கூறிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதைத் தொடர்ந்து, சுவாராம் எனப்படும் மனித உரிமை அமைப்பு, அரசாங்கத்தை சாடியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை இச்சட்டங்கள் உதவி செய்கின்றன என்று கூறப்படுவது ஒரு வகையில் ‘ஏமாற்றும்’ நடவடிக்கையாகவும், பொறுப்பற்ற நடவடிக்கையாகவும் உள்ளது என்று சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கூறினார்.

“அவ்விரு சட்டங்களும் நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியுள்ளார். அவ்வாறு சொல்வதன் வாயிலாக, அச்சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பிலிருந்து செயல்படுத்தப் பட்ட குற்றவியல் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள சட்டங்கள், நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று தானே பொருள்படும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சோஸ்மா மற்றும் போகா சட்டங்கள் நிரந்தரமாக அகற்றப் படாது என்று அண்மையில் முகைதீன் யாசின் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சுவாராம் இன்று அறிக்கை ஒன்றின் வாயிலாக பக்காத்தான் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறி விட்டது என்றும் சிவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய மாற்றங்களை செயல்படுத்தி, மனிதச் சுதந்திரத்திற்காக இப்புதிய அரசாங்கம் செயல்படவில்லை என்றால், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழப்பர்” என்று சிவன் கூறினார்.

“இச்சட்டங்கள் கீழ், தண்டனை அனுபவிப்போர், தங்களின் நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப் பட வேண்டும். அதனால், அவ்விரு சட்டங்களும் அகற்றப் பட வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker