Latestமலேசியா

ஜொகூரில் மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று ரிம.1,000 உதவித் தொகை

ஜொகூர் பாரு, ஜன.2- இன்று  ஜொகூரிலுள்ள மொத்தம் 16,511 மாநில அரசு துறை ஊழியர்கள், சிறப்பு நிதி உதவியாக 1,000 ரிங்கிட் தொகையைப் பெறுவர்.

மாநில மந்திரி புசார் டத்தோ ஒஸ்மான் சபியான் விடுத்திருந்த முந்தைய அறிவிப்புக்கு ஏற்ப இந்த உதவித் தொகை வழங்கப் படுவதாக மாநில அரசுச் செயலாளர் டத்தோ அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.

அண்மைய சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது இந்தச் சிறப்பு உதவி நிதி, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று டத்தோ ஒஸ்மான் தெரிவித்திருந்தார்.

மாநில அரசுப் பணிகளில் அவர்கள் அளித்த பங்களிப்புக்காக இந்தத் தொகை வழங்கப் படுகிறது. அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு அமைப்புக்களின் ஊழியர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்றார் அவர்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker