Latestஇந்தியா

தேர்தல் கூட்டணி; ரஜினி-கமல் வந்தால் சேர்ப்போம்!- பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜன.2- தேர்தல் கூட்டணிக்கு ரஜினி மற்றும் கமல் வந்தால் சேர்ப்போம் என்று பிரதமர் நநேந்திர மோடி கூறியுள்ல அதே வேளையில் சபரிமலை விவகாரம் பாரம்பரியம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் நிர்ப்பந்தம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மோடி கூறியதாவது:-

எங்கள் அடித்தளத்தை விரிவு படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது.

2014 ஆம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூடடணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன சமாஜ் கட்சி சேருமா என்றால் அது பற்றி இங்கு விவாதிக்க முடியாது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும் மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப் பார்த்து பாரதீய ஜனதா மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன்.

அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன் மூலம் மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்என அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker