Latestமலேசியா

புகைக்கத் தடை: சுகாதார அமைச்சர் நேரடி சோதனை

கோலாலம்பூர், ஜன.2- பண்டார் ஸ்ரீ பெர்மாய்சூரி பகுதியில், பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது என்ற விவரம் ஒலி பெருக்கி வாயிலாக பகிரப் பட்டது.

அதே வேளையில், அப்பகுதியில் உள்ள உணவகங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப் பட்டு, அது முழுமையாக கடைப்பிடிக்கப் படுகிறது என்பதை அறிந்து சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் சந்தோஷப் பட்டார்.

அப்பகுதியில் உள்ள மூன்று உணவகங்களை, ஜூல்கிப்ளி நேரிடையாக கண்காணித்தார். அந்த உணவக உரிமையாளர்களுக்கு, ‘புகைப் பிடிப்பதற்கான தடை விதிக்கப் படுவதன் அவசியம்’ குறித்த பிரசுரங்களை அவர் வழங்கினார்.

அந்தத் தடைகள் பொதுமக்களை தண்டிப்பதற்காக விதிக்கப் படவில்லை என்றும், மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டே, அத்தடைகள் விதிக்கப் பட்டுள்ளன என்று அவர் அந்த உணவகங்களின் வாடிக்கையாளர்களிடம் விவரித்தார்.

“சிகரெட் புகை இல்லாத சூழலை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் யாரையும் கட்டிப் போடும் எண்ணத்தில் இந்தத் தடையை நாங்கள் விதிக்கவில்லை” என்று அவர் ஒரு குடும்பத்தினரிடம் கூறினார்.

நாட்டில் மேலும் சில பகுதிகளைப் ‘புகைப் பிடிக்கத் தடை’ பகுதிகளாக அறிவிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

தற்போதைய சூழ்நிலையில், ஒன்பது வகை உணவகங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்தப் பட்டியலில், மேலும் சில பகுதிகளை இணைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

சலவை நிலையங்களில் சிலர் புகைப் பிடித்து வருகின்றனர். அவர்களின் அச்செயல்களால், சிறாருக்கு பாதகம் நேரக் கூடும் என்ற அடிப்படையில், அங்கு புகைப் பிடிக்க தடை விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு யோசனை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker