Latestமலேசியா

புகை பிடிக்கத் தடை: ஒரே நாளில் 1,453 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம்!

கோலாலம்பூர்,ஜன.2- உணவகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள முதல் நாளான நேற்று, அந்த விதியை மீறிய 1,453 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், 3,879 பேருக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் 611 பேர் நாடு முழுவதுமுள்ள 2,786 உணவகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நேற்று நள்ளிரவு 12 மணி வரையில், உணவகங்களில் புகைப் பிடித்த புகார்கள் தொடர்பில் 12 அழைப்புகள் தமதமைச்சுக்கு வந்ததாக அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கை இன்னும் 6 மாதங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாத காலக்கட்டத்தில், உணவகங்களில் புகை பிடிப்பது மீதான அபாயம் குறித்து புகைப்பிடிப்பவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வழங்கப்பட்டுள்ள அவகாசம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உணவகத்திலேயே புகைப் பிடிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மாறாக, புகைப் பிடிக்க அனுமதிக்கும் உணவகங்களுக்கு அதிகபட்சம் 2,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். எனினும், உணவகத்தில் இருந்து 3 மீட்டர் தூரத்திற்கு அப்பால் புகைப் பிடிக்கலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker