Latestமலேசியா

மசீசவை ‘இழுத்து’ மூடுவதே சிறப்பு! -துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜன.2- மசீச தொடர்ந்து அரசியல் கட்சியாக இருப்பதை விட அதனை இழுத்து மூடுவதே மேலானது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் உறுப்புக் கட்சியான மசீசவை பொதுமக்கள் ஒதுக்கி விட்டனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று அவர் சொன்னார்.

“அம்னோவை முன்னாள் பிரதமர்கள் இருவர் அழித்து விட்டதை போன்று, மசீசவும் அழிக்கப் பட்டு விட்டது. முந்தைய காலத்தில், மசீசவை சிறந்த தலைவர்கள் வழிநடத்தியது மட்டுமல்லாது, அக்கட்சி சீன மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்றார் அவர்.

“இப்போதைய சூழ்நிலையில், சீன முதலாளிகள் மட்டுமல்லாது, அனைத்து பிரிவு மக்களும் அக்கட்சியை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி விட்டனர். அக்கட்சித் தலைவர்கள் தங்களின் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டதால், மக்கள் அவர்களை ஒதுக்கி விட்டனர்” என்று மகாதீர் கூறினார்.

இதனிடையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் சமத்துவம் கடைப்பிடிக்கப் படவில்லை என்று மசீச கட்சி கூறியிருப்பதை பிரதமர் மறுத்தார். “அது மசீசவின் கருத்து. மசீச தற்போது ‘உயிராக’ இல்லை!” என்று அவர் குறிப்பிட்டார்.

மசீச தனது கருத்தை வெளியிட அனைத்து சுதந்திரமும் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும், அக்கட்சி எந்த மக்களையும் பிரதிநிதிக்காத வேளையில், அதன் கருத்தை யாரும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை என்று மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker