Latestமலேசியா

தங்கிப் படிக்கும் பள்ளிகள்: ஏழை மாணவர்களுக்கே சலுகை! -மஸ்லி மாலிக்

புத்ராஜெயா, ஜன.3- தங்கிப் படிக்கும் பள்ளிகளில் பணக்காரர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக அப்பள்ளிகளில் பி-40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 விழுக்காடு இட ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார்.

அந்தப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளான, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்குவதை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, இந்த இட ஒதுக்கீடுகள் செயல்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

“நிறைய பணக்கார மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதனால், ஏழை மாணவர்கள் அங்கு தங்களின் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

அதன் அடிப்படையில், ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த இட ஒதுக்கீடு செயல்படுத்தப் படுகிறது” என்று அவர் விளக்கினார்.

“இதற்கு முன்னர், புறநகரில் உள்ள மாணவர்களுக்கு தங்கிப் படிக்கும் பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டன. இனிமேற்கொண்டு, நகரங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கும் அப்பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப் படும்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker