Latestமலேசியா

தேநீர் தர தாமதம்; மனைவியை இஸ்த்திரிப் பெட்டியால் தாக்கிய கணவன் கைது!

பட்டர்வெர்த்,ஜன.3- தேநீரை தாமதமாக தயாரித்து தந்துவிட்டார் என்பதற்காக இஸ்த்திரிப் பெட்டியால் மனைவியின் தலையை அடித்து உதைத்த ஆடவனைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு பாதிக்கப்பட்ட 26 வயது பெண் தனது 43 வயது கணவர் மீது போலீசில் புகார் செய்ததை அடுத்து, அந்த ஆடவனை கைது செய்ததாக செபெராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் நோர்சைய்னி முகமட் நோர் தெரிவித்தார்.

அந்த ஆடவன் நேற்றிரவு 8.40 மணி அளவில் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார். அவ்வாடவனுக்கு ஏற்கெனவே 6 குற்றப்பதிவுகள் இருப்பதாகவும், சிறுநீர் பரிசோதனையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தம்பதி 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த ஆடவனால் அவ்விரு குழந்தைகள் ஏற்கெனவே கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்களா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker