Latestமலேசியா

விமான நிலையங்களில் கிரேப் கார்கள் காத்திருக்கத் தடை!

கோலாலம்பூர்,ஜன.3- விமான நிலையங்களில் பயணிகளுக்காக காத்திருக்கவோ அங்கு இருந்து பயணிகளை ஏற்றவோ கிரேப், உபெர் ஆகிய கார் ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை என்று JPJ எனும் சாலைப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொது தரைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அவ்வாறான சட்டம் இருப்பதாக JPJ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“அந்தந்த இ-ஹெய்லிங் கார் சேவை நிறுவனத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள ஓட்டுநர்கள் தங்களின் செயலியைப் பயன்படுத்தியே பயணிகளை ஏற்ற வேண்டும். அதை விடுத்து, செயலி வாயிலாக ‘புக்கிங்’ செய்தாத பயணிகளை எல்லாம் தங்களின் விருப்பத்திற்கு விமான நிலையத்தில் இருந்து ஏற்றக் கூடாது” என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணியை ஏற்றிய கிரேப் ஓட்டுநருக்கு சம்மன் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு எந்த இ-ஹெய்லிங் கார் ஓட்டுநர்களும் நுழைவதில்லை என்று செய்தி வெளியாகி இருந்தது.

விமான நிலையங்களில் வாடகை கார்களுக்காக தேவை அதிகம் என்பதால், இ-ஹெய்லிங் கார் ஓட்டுநர்கள் லாபம் ஈட்டுவதற்காக அங்கு குவிந்திருப்பார்கள்.

இந்நிலையில், அவ்வாறு செய்யக் கூடாது. அது சட்டமீறல் என்று JPJ எச்சரித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker