Latestஇந்தியாசினிமா

முன்னணி நடிகர்கள் வீடுகளில் அதிரடிச் சோதனை! கட்டுக்கட்டாக பணம்-நகை!

பெங்களூரு, ஜன.4- சினிமா துறையில் கருப்பு பணம் அதிகம் புரள்வதாக நீண்ட காலமாக ஒரு பேச்சு உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில அதிரடி வருமான வரிச் சோதனைகள்  நடந்து வருகின்றன.

தற்போது முன்னணி கன்னட நடிகர்கள் புனீத் ராஜ்குமார், சிவராஜ்குமார், சுதீப், யாஷ் மற்றும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை  நடத்தினர்.

அப்போது கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் 23 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுபற்றி கூறிய நடிகர் சுதீப்,” திடீர் ரெய்டு ஏன் என தெரியவில்லை. நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். நான் எந்த தவறும் செய்யவில்லை பிறகு ஏன் பயப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker