Latestமலேசியா

கேமரன்மலைத் தேர்தல்: தே.மு.வுக்கே வெற்றி! -நஜிப்

கோலாலம்பூர், ஜன. 5- ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

மக்களின் தற்போதைய மனநிலையை வைத்து தாம் இந்த ஆருடத்தைக் கூறுவதாக அவர் சொன்னார். பொதுத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் காப்பாற்றத் தவறி விட்டதால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர் என்றார் அவர்.

தேசிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் சரியான வியூகத்தில் செயல்படுத்தப் பட்டால் கேமரன் மலைத் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடியும். இங்கு தேசிய முன்னணி வெற்றி பெறச் சிறந்த வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

கடந்த மே 9ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலின் போது கேமரன்மலைத் தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சிவராஜ், 597 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக சார்பில் போட்டியிட்ட பக்காத்தான் வேட்பாளர் வழக்கறிஞர் மனோகரனை வென்றார்.

எனினும், வாக்குகள் விலைக்கு வாங்கப் பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் , கேமரன் மலைத்தேர்தல் செல்லாது எனத் தேர்தல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தால் கு ஜனவரி 26 ஆம்தேதி கேமரன் மலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker